சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் வாய்ஸ் சர்ச்சுக்கு புதிய வசதி

பிக்ஸ்பி, அமேசான் அலெக்ஸா ஆகிய குரல் தேடுபொறிகளுடன் கூகுள் அசிஸ்டெண்ட்டும் சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் இடம் பெற உள்ளது. இதைத் தனியாகப் பதிவிறக்கம் செய்யவோ, டி.வியில் நிறுவவோ தேவையில்லை. விருப்பத்தின் பேரில் குரல் தேடுபொறிகளை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.ஸ்மார்ட் டி.விகளில் குரல் உதவி பொறிகளில் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 2018ம் ஆண்டு முதல் பிக்ஸ்பி அறிமுகமானது. அமேசான் அலெக்ஸாவுடம் கூகுள் அசிஸ்டெண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகப் பயனர்கள் இன்னும் அதிகமாக ஸ்மார்ட் டி.வியை உபயோகிக்க முடியும் என்று சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் அசிஸ்டெண்டை பயன்படுத்தி பயனர்கள், தொலைக்காட்சி அலைவரிசையை (சேனல்) மாற்றலாம், ஒலி அளவை மாற்றலாம், செயலிகளைத் திறக்கலாம். இன்னும் பல செயல்பாடுகளுக்கும் இது உதவும். தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (பிரிட்டன்) கூகுள் அசிஸ்டெண்ட் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியா, பிரேசில், ஸ்பெயின், தென் கொரியா ஆகிய நாடுகளில் நவம்பர் மாத இறுதியிலும் வேறு சில நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் தயாரிப்புகளான 4கே, 8கே QLED, கிறிஸ்டல் UHD, த ஃப்ரேம், த செரிஃப், த செரோ மற்றும் த டெர்ரேஸ் ஆகிய ஸ்மார்ட் டி.விக்களில் கூகுள் அசிஸ்டெண்ட் கிடைக்கும்.

You'r reading சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் வாய்ஸ் சர்ச்சுக்கு புதிய வசதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குளிர்காலத்தில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் சருமத்தை பாதுகாக்கலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்