வருகிறது வாட்ஸ்அப் கணக்கில் புதிய வசதி...!

ஒரே கணக்கைக் கொண்டு நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும். இருப்பினும், இந்த வசதி எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.ஒரே வாட்ஸ்அப் கணக்கைக் கொண்டு பல சாதனங்கள் மூலம் குரல் அழைப்புகளை (voice call) வாட்ஸ்அப் தற்போது சோதித்து வருகிறது.

இதற்கு முன்பே இந்த அம்சத்தைப் பற்றிப் பல முறை தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு வெவ்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்ற நம்பகமான தகவல் இப்போதுதான் கசிந்திருக்கிறது. இதில் சிறப்பு அம்சம் என்னவெனில் , வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது, ​​பயனர்களுக்கு முதன்மை சாதனத்தில் இணைய இணைப்பு தேவையில்லை.

எந்தெந்த சாதனங்களை முதன்மை கணக்குடன் இணைக்க வேண்டும் என்ற எந்தெந்த சாதனங்களில் நீக்க வேண்டும் என்பதற்கான வசதிகளும் வாட்ஸ்அப் செட்டிங்கில் இடம்பெறும்.

You'r reading வருகிறது வாட்ஸ்அப் கணக்கில் புதிய வசதி...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி அரசியல் விலகல் பின்னணி... ஹைதராபாத்தில் என்ன நடந்தது?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்