டிரிபிள் காமிரா, 5000 mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன் அறிமுகம்

தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டில் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி M02 மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 450 பிராசஸருடன் இது வெளி வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.5 அங்குலம் எச்டி+; 720X1560 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி (1டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் கூடுதலாக்கலாம்)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (மூன்று காமிராக்கள்)
பிராசஸர்: ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 450; ஆட்ரினோ 506 ஜிபியூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ
மின்கலம்: 5000 mAh

சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனில் 3ஜிபி+32ஜிபி வகை ரூ.8,999/- ரூபாய்க்கும் 4ஜிபி+64ஜிபி வகை ரூ.9,999/- ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

You'r reading டிரிபிள் காமிரா, 5000 mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செயின் திருடர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி? அனுபவப்பட்ட அம்மணி சொல்கிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்