வோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா

வோடபோன் மொபைல் செயலியைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் டேட்டா வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.2,595/- ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி உயர்வேக டேட்டா, வரம்பில்லா அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ஓடிடி சந்தாவும் கட்டணமில்லாமல் கொடுக்கப்படுகிறது. இதே திட்டத்தில் வோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த சலுகை ஓராண்டுக் காலத்திற்கு அல்லது திட்டத்தின் முடிவு நாள் வரைக்கும் வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.இது தவிர ரூ.699/-, ரூ.449/-, ரூ.299/- ஆகிய திட்டங்களின்படி ரீசார்ஜ் செய்வோருக்கு இரட்டை டேட்டா பலன்கள் கிடைக்கும். ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, வரம்பில்லா அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும். ரூ.249/- ரீசார்ஜ் செய்வோருக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வரம்பில்லா அழைப்பு மற்றும் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் கொடுக்கப்படுகிறது.

You'r reading வோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்