10 ஜிபி இலவச டேட்டா - ஐடியா அதிரடி ஆஃப்பர்!

ஐடியா அதிரடி ஆஃப்பர்!

ஐடியா, வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி வரை இலவச டேட்டா வழங்க முடிவு செய்துள்ளது. வோல்ட்இ அழைப்பை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கணக்கில் 48 மணி நேரத்தில் இந்த இலவச டேட்டா சேர்க்கப்படும்.

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் முதற்கட்டமாக மகாராஷ்ட்ரா, கோவா, கேரளா, குஜராத், ஆந்திர பிரதேசம், செலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஐடியா ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது அனைத்து வாடிக்கையாளர்ளுக்கும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. இதில், ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால், மேற்கொள்ளும் போதும் அதிவேக 4ஜி டேட்டா பயன்படுத்த முடியும். இதன் முலம் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் எவ்வித அதிக கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஐடியா 4ஜி சேவை தானாகவே எனேபிள் செய்யப்படும். வேலை செய்யாதோர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து ACT VOLTE என டைப் செய்து 12345 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அதிவேக நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஐடியா 4ஜி சிம் கார்டினை ஸ்மார்ட்போனின் சிம் கார்டு ஸ்லாட் 1-இல் பயன்படுத்த வேண்டும்.

ஸ்லாட் 1-இல் ஐடியா சிம் கார்டினை வைத்து, பிரெஃபர்டு நெட்வொர்க் டைப் சென்று 4ஜி/3ஜி/2ஜி என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்மார்ட்போன் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 4ஜி ஹெச்டி/ வோல்ட்இ என தெரியும். இந்த குறியீடை பார்த்ததும் உங்களின் ஸ்மார்ட்போனில் வோல்ட்இ அழைப்புகளை பெற முடியும்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஐடியா 4ஜி வோல்ட்இ வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

You'r reading 10 ஜிபி இலவச டேட்டா - ஐடியா அதிரடி ஆஃப்பர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்