இனி செய்யுங்கள் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால்!

இனி வாட்ஸ் அப் மூலமாகவும் க்ரூப் வீடியோ கால் செய்யும் புதிய அப்டேட் அறிமுகம் ஆகியுள்ளது.

2014-ம் ஆண்டு சுமார் 1.26 லட்சம் கோடி ரூபாய்க்கு வாட்ஸ்அப் உரிமையை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விலைக்கு வாங்கியது. அதன் பின்னர் வாட்ஸ்அப் வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக் பக்கங்களில் உள்ள வசதிகளைவிட வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதீத நவீன வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் மார்க் சக்கர்பெர்க். இந்திய சமூக வலைதளமான 'ஹைக்' பிரபலமானதாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப் பெற்ற இடத்தை வேறெந்த வலைதளங்களாலும் பெற முடியவில்லை.

இத்தனை காலம் ஈமோஜிக்கள் நிறைந்த வாட்ஸ்அப், இனி வரும் காலங்களில் 'ஹைக் ஸ்டிக்கர்ஸ்' போல் 'வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ்' உடன் கலக்கக் காத்திருக்கிறது. மேலும் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே வீடியோ கால் செய்யும் வசதி, இனிமேல் 'க்ரூப் வீடியோ கால்' ஆக மேம்பட்டு உள்ளது.

ஒரு நாளுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால், வாய்ஸ் கால் மட்டும் 2 பில்லியன் நிமிடங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதாம். இதனாலேயே மார்க் வீடியோ கால் வசதியை மேம்படுத்தும் யோசனையை செயல்படுத்த உள்ளதாகக் கூறுகிறார்.

You'r reading இனி செய்யுங்கள் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'கூட்டணி தான் இல்லை, ஜம்முவே இல்லை என்றில்லை’: பாஜக பொதுச்செயலாளர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்