மெர்சிடிஸ் கூப்பே- 2.55 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனை!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி கூபே சொகுசு கார் டெல்லியில் ஷோரும்களில் 2.55 கோடி ரூபாய்க்கு இக்கார் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2018-ம் ஆண்டில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ரக காரின் நான்காவது மாடலாகத் தான் தற்போது மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இதுபோல் பல ரகங்கள் வெளிவரும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், அறிமுக நிலையில் மிகவும் குறைந்த அளவிலான கார்களே விற்பனைச் சந்தையில் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூபே கார் சொகுசு பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ் 63 என்ற கூபே வகை கார் தான் அறிமுகம் ஆகியுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் ஏஎம்ஜி எஸ் 63 கேப்ரியோலட் வகை கார்கள் விற்பனைக்கு உள்ளது. ஆனால், விரைவில் இந்தியாவிலும் கேப்ரியோலட் வகை கார்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மெர்சிடிஸ் கூப்பே- 2.55 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவீடனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்