வோடபோனில் அன்லிமிடட் வாய்ஸ் கால் எப்படி பார்க்கலாமா?!

வோடபோனில் அன்லிமிடட் வாய்ஸ் கால்

டவர் இல்லாத இடத்திலும் எங்களின் சிக்கனல் கிடைக்கும் என்று வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனம்தான் வோடபோன். ஜியோவின் வருகைக்குப்பின் அனைத்து நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு எதாவது ஒரு ஆஃபரைக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அதில் தற்போது வோடபோன் புது பிரீபெய்ட் பிளானைக் கொண்டுவந்துள்ளது.

தற்போது வோடபோன் நிறுவனம் ரூ.279க்கு புதிய பிரீபெயிட் பிளானை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இச்சலுகை ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோனின் இப்புதிய ரூ.279 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டிக்கு, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வழங்குகிறார்கள். அதிலும் கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்பட உள்ளது.

இச்சலுகையை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ.300-க்கும் குறைவான விலையில் இதுவரை யாரும் வழங்கவில்லை. ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட துவக்க விலை ரூ.348 என்ற நிர்ணய விலையிலும், அதேபோல் ஏர்டெல்லும் 300 ரூபாய்க்கு அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறது. எனவே, வோடபோன் இந்த இரு நிறுவங்களுக்கு போட்டியாக ரூ.279-க்கு இந்த சலுகையை வழங்கியுள்ளது.

இந்த ஆஃபர் எடுப்படுமானு பார்ப்போம்.

You'r reading வோடபோனில் அன்லிமிடட் வாய்ஸ் கால் எப்படி பார்க்கலாமா?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெப் சீரிஸ்களுக்கு சென்சார் கிடைக்குமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்