ஸ்மார்ட்போன்..ஸ்மார்ட்போன்..1 ரூபாய்க்கு ஸ்மார்போன்.

Smart Phone Offer Rupee 1

தீபாவளி நெருங்கிவிட்டது, கடைகளில் சலுகைகளும் வாரி வழங்க ஆரம்பித்துவிட்டனர். இந்த கடையில் வாங்குவதா? அல்லது அந்த கடையில் வாங்குவதா என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க இப்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பிளிப்ஃகார்ட், அமேசான் போன்று பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் சியோமி நிறுவனமும் தன் பங்கிற்கு தீபாவளி ஆஃபர்களை வழங்கியுள்ளது.


இப்பொழுது தீபாவளிக்காக தீபாவளி வித் எம்ஐ என்ற பெயருடன் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்டு கலர் வேரியன்ட் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 எனும் துவக்க விலையில் தற்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிளாஷ் விற்பனை Mi.com வலைதளத்தில் அக்டோபர் 24 (இன்று) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த தீபாவளீ ஆஃபர் செம இல்ல!!!

You'r reading ஸ்மார்ட்போன்..ஸ்மார்ட்போன்..1 ரூபாய்க்கு ஸ்மார்போன். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வல்லாரை கீரையின் மருத்துவ பயன்களை அறிவோம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்