இனி ஸ்டிக்கர் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்..

Now WatsApp Intrroduced New Sticker Feature

வாட்ஸ்அப்பில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் தற்போது வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புலிருந்து இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக தன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கி இருக்கிறது.

இப்புதிய ஸ்டிக்கர் வசதியை பெறுவதற்கு படிப்படியாக அப்டேட் வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து வாடிக்கையாளர்களும் இவ்வயான வசதி கிடைக்க சில நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து பயன்பெறலாம்.

முதலாக ஸ்டிக்கர்ஸ் அம்சத்தில் கப்பி என்ற பெயரில் ஒரே பேக் மட்டும் பிரீ-இன்ஸ்டால் செய்யதுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அன்-இன்ஸ்டால் செய்து, கூடுதலாக கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்களையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஸ்டிக்கர்கள் எமோஜி, புகைப்படங்கள் அல்லது ஜிஃப்களை விட இவை வித்தியாசமானவை. இவை இயங்குதளங்கள் அல்லது எமோஜி போன்ற தளங்களின் ஆதரவின்றி கிடைக்கிறது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் ஜிஃப் ஐகானை அடுத்து வலதுபுறத்தில் ஸ்டிக்கர் ஐகான் தெரியும். இதில் பயனர் விரும்பும் ஸ்டிக்கர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஐ.ஓ.எஸ். பயனர்கள் டெக்ஸ்ட் இன்புட் பகுதியில் காணப்படும் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து உபயோகிக்க வேண்டும்.

புதிதாக பேக்களை சேர்க்க ஸ்டிக்கர் பகுதியின் இடது புறத்தில் இருக்கும் பிளஸ் ஐகானஐ கிளிக் செய்து ஸ்டிக்கர் ஸ்டோர் செல்ல வேண்டும். இங்கு அனைத்து ஸ்டிக்கர்களும் இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர்களை பிரீவியூ மற்றும் டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மை ஸ்டிக்கர்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

You'r reading இனி ஸ்டிக்கர் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளி ஸ்பெஷல் : தித்திப்பான மைசூர் பாகு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்