முக்கியமற்ற அழைப்புகளை தவிர்க்க உதவுகிறது கூகுள் அசிஸ்டெண்ட்!

Helps avoid important calls from Google Assistant!

கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர், முக்கியமற்ற மற்றும் தேவையில்லாத அழைப்புகளில் நேரத்தை செலவழிப்பதை தவிர்ப்பதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் உதவி செய்ய கூகுள் நிறுவனம் வழிசெய்துள்ளது.அழைப்புத் திரை (Call Screen) என்ற இந்த வசதி, நம்மை தொலைபேசி மூலம் அழைப்பவர்கள் யார்? என்ன விஷயமாக நம்மிடம் பேசுவதற்கு விரும்புகிறார்கள் என்று அழைப்பை ஏற்பதற்கு முன்னரே அறிந்து கொள்ள உதவுகிறது. அழைப்பவர்களின் பதிலை வரி வடிவில் (transcript)பெற்று, அதைப் பொறுத்து, ஸ்மார்ட்போனில் உள்ள விரைவான பதில் (Quick Reply) பட்டியலில் ஒன்றை "நான் பின்னர் அழைக்கிறேன்" "I'll call you back later" அனுப்பி வைக்கலாம் அல்லது அந்த அழைப்பை ஏற்க மறுக்கலாம்; குறிப்பிட்ட எண்ணை தேவையற்றது என்று வகைப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையற்ற அழைப்புகளில் நேரம் வீணாவதை தவிர்க்க உதவும் இந்த 'கால் ஸ்கிரீன்' எனப்படும் 'அழைப்புத் திரை' வசதி வைஃபை மற்றும் மொபைல் டேட்டா போன்ற இணைய இணைப்புகள் இல்லாமலே இயங்கக்கூடியதாகும்.
அழைப்புகளை பதிவு செய்வது மற்றும் போனின் திரைக்காட்சியை (Screen recording) பதிவு செய்வது போன்ற மூன்றாம் நபர் செயலிகளுடன் கூகுளின் இந்த வசதி இணைந்து செயல்படாது. கால் ஸ்கிரீன் வசதியை பயன்படுத்தும்போது மற்ற செயலிகளின் இயக்கத்தை நிறுத்தி விடவேண்டும் என்று கூகுள் கூறியுள்ளது.

அழைப்பவரின் பதிலை கால் ஸ்கிரீனால் புரிந்து கொள்ள இயலாத தருணங்களில், பயனர், "நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை" "I can't understad" என்ற பதிலை அழுத்த வேண்டும். அப்போது, மறுமுனையில் அழைப்பவருக்கு, "நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ள இயலவில்லை. தயவுசெய்து இன்னொருமுறை கூறுகிறீர்களா?" "It's difficult to understand you at the moment. Could you repeat what you just said?" என்ற கேள்வி கேட்கும்.

இந்த வசதி கிடைக்கும் போன்களில் தற்போது வரிவடிவ செய்திகள் (transcript)சேமித்து வைக்கப்படுவதில்லை. வரும் நாட்களில், அழைப்பு விவரங்களில் வரி வடிவ தொடர்புகளையும் காண முடியும் என்று கூறப்படுகிறது.
கால் ஸ்கிரீன் வசதி தற்போது அமெரிக்காவில் பிக்ஸல் 2, 2எக்ஸ்எல், பிக்ஸல் 3 மற்றும் 3எக்ஸ்எல் ஆகிய ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் ஆங்கிலம் பேசுவோருக்கு மட்டும் கிடைக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இவ்வசதி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வெளியிடப்படவில்லை.

You'r reading முக்கியமற்ற அழைப்புகளை தவிர்க்க உதவுகிறது கூகுள் அசிஸ்டெண்ட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்த சமூக ஆர்வலர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்