மைக்ரோமேக்ஸ் என் சீரிஸ் கேஷ் பேக்குடன் அறிமுகம்!

Micromax N series cash back offer

மைக்ரோமேக்ஸ் இன்பர்மேடிக்ஸ் 'என்' சீரிஸ் போன்கள் இரண்டை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பர் 26ம் தேதி முதல் இவை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இன்ஃபினிட்டி என்11 மற்றும் என்12 ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு போன்களை மைக்ரோமேக்ஸ் டிசம்பர் 18ம் தேதி அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.19 அங்குலம் ஹெச்டி+ திரை; 18.9:9 விகிதாச்சாரம்

காமிரா: 13 எம்பி மற்றும் 5 எம்பி இரண்டு பின்பக்க காமிராக்கள்

பேட்டரி: 4000 mAh மின்கல ஆற்றல்

சேமிப்பளவு: 32 ஜிபி உள்ளார்ந்த சேமிப்பு

இயக்கவேகம்: என்11: 2 ஜிபி RAM; என்12ஸ்போர்ட்ஸ்: 3 ஜிபி RAM. என்11 போன் ரூ.8,999 என்ற விலையிலும் என்12 ஸ்போர்ட்ஸ் ரூ.9,999 என்ற விலையிலும் கிடைக்கும்.

கேஷ் பேக் மற்றும் டேட்டா சலுகை

ஜியோவுடன் இணைந்து இந்த இரண்டு போன்களுக்கும் 2,200 கேஷ் பேக் மற்றும் 50 ஜிபி கட்டணமில்லா டேட்டா சலுகைகள் வழங்கப்படும் என்று மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.

You'r reading மைக்ரோமேக்ஸ் என் சீரிஸ் கேஷ் பேக்குடன் அறிமுகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேவி படத்தின் காப்பியா சீதக்காதி? விஜய்சேதுபதி விளக்கத்தால் கிளம்பிய புது சர்ச்சை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்