தென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்காத தென்காசி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார். மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தென்காசியில் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இந்த கூட்டத்தில் திசையன்விளையை சேர்ந்த சுதாகர் பாலாஜி என்பவரின் மேல் முறையீட்டு மனுக்களுக்கு கூட உரிய பதிலளிக்காத தென்காசி பொதுப்பணித்துறை சிற்றாறு பிரிவு உதவி செயற்பொறியாளர் உதயகுமாருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆணையர் பிரதாப் குமார் உத்தரவிட்டார். இந்த தொகையை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

You'r reading தென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாராவுக்கு போட்டியாக.. அம்மன் கெட்டப்பில் கலக்கும் ஷாலு ஷம்மு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்