பொங்கல் பரிசு நான் தான் கொடுப்பேன்: ஆளும் கட்சிப் பிரமுகர் அடாவடி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பொங்கல் பரிசு டோக்கன்களை நான்தான் வழங்குவேன் என்று கூறி அதிமுக பிரமுகர் ஒருவர் மொத்தமாக எடுத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் அரசு அறிவித்த 2500 ரூபாய்க்கான பொங்கல் பரிசுத் தொகை வழங்க நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆளுங் கட்சி பிரமுகரான சந்தோசம் என்பவர் நியாய விலை கடை ஊழியரிடம் இருந்து டோக்கன்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்.

இது அதிமுக அரசு அறிவித்துள்ள பரிசு இதை அதிமுக நிர்வாகிகள் தான் வழங்க வேண்டும். நான் இல்லாமல் நீ கொடுக்க முடியாது என்று சொல்லி டோக்கன்கள் அனைத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரேஷன் கடை ஊழியரை முற்றுகையிட்டனர். அரசு வழங்கும் பரிசுத் தொகைக்கான டோக்கனை அரசு ஊழியர் தானே வழங்க வேண்டும் அதிமுகவினர் எப்படி வழங்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிலர் டோக்கன்களை பறித்துக் கொண்ட சந்தோஷிடமும் வாக்குவாதம் செய்தனர் . இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்த தகவல் அறிந்து வந்த பெரிய குளம் போலீசார் பொதுமக்களிடமிருந்து நியாய விலைக் கடை ஊழியரை மீட்டுப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். ஆர் கொள்ள ஆளும் கட்சி பிரமுகர் சந்தோசம் டோக்கன் தப்பித்துவிட்டார். இதற்கு மாற்று ஏற்பாடு செய்வதாகக் கூறிய அதிகாரிகள் அப்பகுதி மக்களைச் சமாதானப்படுத்தி உள்ளனர்

You'r reading பொங்கல் பரிசு நான் தான் கொடுப்பேன்: ஆளும் கட்சிப் பிரமுகர் அடாவடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்