தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்

தூத்துக்குடியில் நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றக் கோரி பல இடங்களில் சாலை மறியல் நடந்தது.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி தேங்கிய நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதே போல் முத்தம்மாள் காலணி ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி எட்டையா புரம் சாலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மிகுந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைநீர் அகற்றப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

You'r reading தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசு வழங்குவதில் பாகுபாடு என சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்