திருச்சி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவி மற்றும், இணைப் பேராசிரியர்கள் பணியிட நியமனம் குறித்துக் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்படும் முறையில் இருந்து இது மாறுபட்டிருந்தது.துறை வாரியாக உள்ள காலியிடம்,இட ஒதுக்கீட்டுப் பணியிடங்கள், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் அதில் இடம் பெற வேண்டும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் மொத்த பணியிடத்துக்கும் ஒரே அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கோரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் .பாலமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்தும்.விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You'r reading திருச்சி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி கட்சியில் இணைகிறார் லாரன்ஸ்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்