திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்களுக்கு தடை..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோவில்களில் முக்கிய திருவிழாக்கள் வைபவங்கள் ரத்து செய்யப்பட்டு பெயரளவுக்கு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. புறநானூற்று பரவுவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோவில்களில் முக்கிய திருவிழாக்கள் வைபவங்கள் ரத்து செய்யப்பட்டு பெயரளவுக்கு கோவில் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத் திருநாளுக்கு புகழ்பெற்ற திருவண்ணாமலையிலும் இந்த ஆண்டு மகா தீபத்தன்று பக்தர்கள் வரவும் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழா நடக்கும் 9 நாட்களிலும் தினமும் ஆன்லைனில் பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தீபத் திருவிழாவுக்கு வெளி மாவட்ட, மாநிலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இந்த ஆண்டு இயக்கப்படாது தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான வரும் 29ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத் திருவிழா வும் பக்தர்கள் இன்றி நடைபெறும்.. இதேபோல் 26 ஆம் தேதி நடைபெற இருந்த மகா ரதம் எனப்படும் பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது மகா தீபத் திருவிழாவையொட்டி பத்து நாட்கள் திருவிழா வைபவங்கள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெறும்.

You'r reading திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்களுக்கு தடை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியை மீண்டும் மிரட்டும் கொரோனா.. தீவிர நடவடிக்கை என கெஜ்ரிவால் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்