மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஐந்தாம் கட்ட லீக் போட்டி #MTBC

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் ஐந்தாம் கட்ட லீக் போட்டி சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்டு மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

விளையாட்டின் தொடக்க நாள் முதல் ஒவ்வொறு லீக் போட்டியும் வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நான்கு லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது லீக் போட்டி கடந்த 9ம், 10ம், 12ம், 13ம் ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

ஒவ்வொரு லீக் போட்டியிலும் 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்ற கடந்த ஐந்து லீக் போட்டிகளில், முன்னிலையில் இருக்கும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.

குரூப்-E ன் MN Mavericks அணியை சேர்ந்த யசோதா பப்பிநிதி மொத்தம் ஐந்து லீக் போட்டிகளில் 1005 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

இவரை தொடர்ந்து, குரூப் c-ன் Smashers அணியை சேர்ந்த சன்னி அமின் 4 வார போட்டிகளில் 859 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், குரூப் B-ன் Desi Pandits அணியை சேர்ந்த யேசுதாசன் 757 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இவர்களை அடுத்து, குரூப் D-ன் Champions United அணியை சேர்ந்த சரவணன் சசுரா மற்றும் குரூப் B-ன் Desi Pandits அணியை சேர்ந்த வம்சி கிருஷ்ணா ஆகியோர் முறையே 755 மற்றும் 739 மதிப்பெண்கள் பெற்று 4 மற்றும் 5ம் இடங்களை பெற்றுள்ளனர்.

குரூப்களின் அடிப்படையில் அணிகள் எடுத்துள்ள புள்ளி விவரம்:

குரூப் A:
Indian Colts அணி விளையாடிய 5 போட்டிகளின் அடிப்படையில், 30 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து, Minnesotta Indians அணி 27 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.

குரூப் B:
Desi Pandits அணி விளையாடிய 5 போட்டிகளின் அடிப்படையில் 30 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தொடர்ந்து Indian Knights அணி 24 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.

குரூப் C:
Cummins Cricket Club அணி, Titans அணி, Smashers அணிகள் விளையாடிய 5 போட்டிகளின் அடிப்படையில் முறையே 24 புள்ளிகள் பெற்று மூன்று அணிகளும் முதல் இடத்தில் உள்ளன.

குரூப் D:
Gujju XI அணி விளையாடிய 5 போட்டிகளின் அடிப்படையில் 27 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தொடர்ந்து Champions United 24 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளன.

குரூப் E:
இந்த குரூப்பில், MN Mavericks, மற்றும் Epic ஆகிய அணிகள் தலா 24 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

குரூப் F:
Mighty minns, V Rock, Eagan Panthers, Rising Warriors ஆகிய அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் தலா 24 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.
மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில், ஒரே குரூப்பில் பல அணிகள் ஒரே புள்ளிகளில் உள்ளனர். இதனால், அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தொடர்ந்து, லீக் போட்டியின் முடிவில் முதல் 32 இடங்களில் உள்ள அணிகள் அடுத்தகட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், அடுத்த லீக் போட்டி வரும் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஐந்தாம் கட்ட லீக் போட்டி #MTBC Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் நான்கு நாட்களில் 2,750 பேர் கைது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்