கிறித்தவர்கள் கொண்டாடிய விநாயகர்... நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பதில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் விநாயகர் சிலையை கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குள் வரவழைத்து வழிப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் தென் மற்றும் வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் விநாயகர் சதூர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முதல் நாள் பூஜைகள் முடிந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஸ்பெயின் நாட்டில் பெரிய விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாளான இன்று, விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, பிரசிதிப்பெற்ற கிறிஸ்தவ ஆலயம் முன்புறம் வழியாக உள்ள சாலையில், விநாயகர் ஊர்வலம் செல்லவதற்காக ஆலய நிவாகத்தினரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அப்போது, ஆலய நிர்வாகத்தினர், விநாயகர் சிலையை உள்ளே கொண்டு வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விநாயகர் சிலையை கிறிஸ்தவ ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு, விநாயகர் சிலை முன்பாக கிறிஸ்தவ பக்தர்கள் பாட்டு பாடி விநாயகரை கொண்டாடினர்.

தமிழகத்தில், விநாயகர் சிலை கரைப்பதில் பிரச்னை கிளம்பியுள்ள நிலையில், வெளிநாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading கிறித்தவர்கள் கொண்டாடிய விநாயகர்... நெகிழ்ச்சி சம்பவம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அண்ணா பிறந்தநாள்... கொண்டாடும் கட்சிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்