மழலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த நிர்வாணப் பெண்! அலறி ஓடிய பணிப்பெண்கள்!!

naked woman entered in kids centre,

அமெரிக்காவில் குழந்தைகள் பள்ளி ஒன்றுக்குள் அதிகாலையில் அத்துமீறி நுழைந்த பெண் நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். காலை வகுப்பறைகளை திறந்த பணிப் பெண்கள் இருவர், அந்த நிர்வாணப் பெண்ணைப் பார்த்தும் அலறியடித்து கொண்டு ஓடினர்.

அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் ஸ்டாப்போர்டில் ‘மூவ் லேர்னிங் சென்டர்’ என்ற பெயரில் மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. கடந்த வியாழனன்று காலையில் பள்ளியை திறக்க வந்த பணிப் பெண், ஒரு வகுப்பறையை திறந்த போது உள்ளே ஒரு இளம்பெண் நிர்வாணக் கோலத்தில் இருந்துள்ளார். அலறியடித்து திரும்பி ஓடிய பணிப் பெண், இன்னொரு பணிப்பெண்ணை அழைத்து வந்தார். அப்போதும் அந்த நிர்வாணப் பெண் அங்கேயே இருந்தார்.

இதையடுத்து, அந்தப் பணிப்பெண்கள், காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு போனில் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து பார்த்த போது அந்த பெண் உடையை அணிந்திருந்தார். 

இரண்டு கையிலும் சிறிய கத்தி போன்ற கரண்டிகளை வைத்திருந்தார். அவரை போலீசார் பிடித்த போது, தான் அந்த மழலைப் பள்ளி உரிமையாளரின் மனைவி என்றும் தன்னை கைது செய்யக் கூடாது என்றும் கூறினார். போலீசாரின் விசாரணையில் ஹேவன் கானர் என்ற அந்த 23 வயது பெண், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறைக்கு சென்று சமீபத்தில்தான் வெளியே வந்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அவர் பள்ளிக்குள் வந்த போது மது அருந்தியிருந்தாரா, எதற்காக அங்கு வந்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

You'r reading மழலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த நிர்வாணப் பெண்! அலறி ஓடிய பணிப்பெண்கள்!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதற்கு பாலாவின் தமிழ் வெர்ஷனே மேல்... அர்ஜூன் ரெட்டியின் பாலிவுட் வெர்ஷன் டீசர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்