முதல் முறையாக வெளியானது பிளாக் ஹோல் புகைப்படம்!

black hole first ever picture released

வான்வெளியில் உள்ள கருந்துளையின் புகைப்படத்தை முதன்முதலாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் இன்று வெளியானது.

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிளாக் ஹோலை பற்றி ஆய்வு செய்வதற்காக ஈவென்ட் தொலைநோக்கித் திட்டம், 2012-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, சிலி உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கி ஈவென்ட் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ டெலஸ்கோப்களை பயன்படுத்தி இரண்டு கருந்துளைகளைக் கண்டுபிடித்துள்ளனர். முதல் கருந்துளை ‘சாகிட்டாரிஸ் ஏ’ என்றும் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கருந்துளை எனவும், இரண்டாவது கருந்துளை விர்கோ விண்மீன் மண்டலத்தில் M87 கோள்களுக்கு மையத்தில் அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

கருந்துளையில் புவி ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளி வர முடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும். சிறிய ப்ளாக் ஹோல் பெரும் சூரியனை உள்ளிழுத்துக் கொள்ளும். வெறும் வரைபட வடிவமாகவே வெளி வந்து கொண்டிருந்த கருந்துளை புகைப்படம் இன்று அதன் இயற்கையான வடிவம் வெளியிடப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, வான்வெளியில் உள்ள கருந்துளையின் புகைப்படத்தை முதன்முதலாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

 

பெண்கள் விண்வெளியில் நடப்பதற்கு நாசா ஏற்பாடு

You'r reading முதல் முறையாக வெளியானது பிளாக் ஹோல் புகைப்படம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூகுள் பே க்கு லைசென்ஸ் இருக்கா? ரிசர்வ் வங்கியிடம் அதிரடியாக கேள்வி கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்