பிரான்ஸின் 850 ஆண்டுகள் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

Fire guts Notre-Dame Cathedral in Paris Macron pledges to rebuild

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள 850 ஆண்டுகால புராதன தேவாலயமான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் முழுவதும் மரத்தினால் உருவாக்கப்பட்டது. சில மாதங்களாக இந்த உலகப் புகழ் வாய்ந்த தேவாலயத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

850 ஆண்டுகால வரலாற்றை தன்னுள் உள்ளடக்கிய நாட்டர்டாம் தேவாலயம் முழுதும் தீக்கிரையானது. அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல், உலகளவில் உள்ள கிறிஸ்துவ மத மக்களின் மனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திங்கள் மாலை பிடித்த இந்த தீ விபத்து தொடர்ந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்தது. இந்த தீவிபத்தின் போது தேவாலயத்துக்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் தீம்பிழம்பாக கொளுந்து விட்டு எரிந்ததை கண்ட பாரீஸ் நகர மக்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

உலகளவில் இந்த தேவாலய தீவிபத்து சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணியுள்ளது. பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மீண்டும் தேவாலயத்தை புதுப்பித்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த தீவிபத்து குறித்து அறிந்த அதிபர் டிரம்ப், தனது மனம் மிகவும் வாடுவதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உலக தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் இந்த சம்பவம் குறித்து தங்களின் நிலைபாட்டை தெரிவித்து வருகின்றனர்.

You'r reading பிரான்ஸின் 850 ஆண்டுகள் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்