குட்டி இளவரசரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹாரி-மேகன் தம்பதியினர்!

British Prince Harry and Actress Meghan new born child first picture released

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் நடிகை மேகன் மார்கெலுக்கும் நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதை அறிவிக்கும் விதமாக குட்டி இளவரசரின் புகைப்படம் மற்றும் வீடியோவை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 19ம் தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கெலுக்கு காதல் திருமணம் அரச குடும்ப சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

சரியாக ஒரு ஆண்டு காலம் நெருங்கும் நேரத்தில் மேகன் குட்டி இளவரசருக்கு தாயாகி உள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் இரண்டாவது ராணி எலிசபெத்தின் 8வது கொள்ளுப்பேரனாக பிறந்துள்ள இந்த குழந்தையின் பெயரை ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று குழந்தை பிறந்தது முதல் தற்போது குழந்தையின் முதல் புகைப்படம் வெளியானது என லண்டன் நகரமே உற்சாக வைபவத்தில் மகிழ்ந்து கொண்டாடி வருகிறது.

You'r reading குட்டி இளவரசரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹாரி-மேகன் தம்பதியினர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பம்; கமல் தான் தொகுத்து வழங்குகிறார்! போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்