இனிமே பிட்டே அடிக்க முடியாது - ஆசிரியர் செய்த அடடே ஐடியா!

No space to do copy in exam brilliant plan from this teacher

தேர்வுகளும் பிட் அடிப்பதும் சேர்ந்தே இருக்கும் ஒரு செயலாக பல காலமாக உலாவி வருகிறது. மெக்சிகோவை சேர்ந்த ஆசிரியர் பிட் அடிக்காமல் இருபப்தற்காக செய்த செயல் உலக அளவில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவின் ட்லக்ஸ்கலா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் இந்த கூத்து நடந்துள்ளது. தேர்வு எழுதும் அறை சிறியதாக உள்ளதால், மாணவர்கள் எளிதில் காப்பி அடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், அந்த பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் அனைவரின் தலைகளிலும் ஒரு அட்டை பெட்டியை மாட்டிவிட்டு, கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் ஒட்டை போட்டு, தேர்வை எழுத வைத்துள்ளார்.

இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த ஆசிரியரின் அறிவுக்கூர்மையை சிலர் பாராட்டியும் சிலர் கிண்டலடித்தும், இது மனித தன்மையற்ற செயல் என மாணவர்கள் சார்பில் அவருக்கு மீம்கள் மூலம் கண்டனங்களும் அதிக அளவில் கிளம்பி வருகின்றன.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவு புகுட்டும் பணியில் ஈடுபடுபவர்கள், முதலில் பிறரை பார்த்து காப்பி அடிப்பது மற்றும் பிட் அடிப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க சொல்லித் தருவது மிகப்பெரிய சிலபஸாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.

You'r reading இனிமே பிட்டே அடிக்க முடியாது - ஆசிரியர் செய்த அடடே ஐடியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அலங்கரிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் கொத்தமல்லி அவசியம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்