மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் அலறியடித்து ஓடி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி அருகில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஓயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கி.மீ தொலைவிலும் மற்றும் பூமிக்கு அடியில் 24 கி.மீ ஆழத்திலும் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், அலறிப்போன மக்கள் வீட்டை விட்டு ஓடி வந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவிரி நீர் விவகாரம் குறித்து பேசாத ரஜினிகாந்த் ரசிகர்களிடம் என்ன பேசினார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்