என்னது அர்னால்டை காதலிக்கிறாரா டிரம்ப்?

Arnold says that he was loved by Trump

ஹாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர். ஆனால், அவருக்கும் டிரம்புக்கும் எப்போதுமே கருத்தியல் ரீதியான மோதல்கள் வெடித்து வருவது வாடிக்கையான ஒன்று.

ஒரே கட்சியில் இருக்கும் போது, உங்களுக்குள் ஏன் இது போன்ற சண்டைகள் வெடிக்கிறது என சமீபத்தில், பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையளித்த அர்னால்டு, “டிரம்ப் என்னை காதலிக்கிறார் என நினைக்கிறேன். நான் செய்ய விரும்புவதை அவர் செய்கிறார்” என சொல்லி சிரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒருவரின் கொள்கைகளால் அமெரிக்கா என்றுமே மாறாது என்றும் இன்னமும் வெளிநாட்டு மக்கள் அமெரிக்கா வருவதையே விரும்பி வருவதில் இருந்தே இது உண்மை என புரிந்து கொள்ளலாம் என்றும் டிரம்பின் கொள்கைகளை சீண்டியுள்ளார் அர்னால்ட்.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியுரிமை கட்சி சார்பில் போட்டியிட, அர்னால்டும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading என்னது அர்னால்டை காதலிக்கிறாரா டிரம்ப்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராகுல் நீங்க ரெஸ்ட் எடுங்க.. சுப்மன் கில் நீங்க களத்துல இறங்குங்க!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்