கொரேனா பாதிப்பு.. அமெரிக்கா முதலிடம்.. 83,000 பேர் பாதிப்பு..

US Tops World In Coronavirus Cases, Overtaking China And Italy.

உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.சீனாவில் சுமார் 81,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 70 ஆயிரம் பேர் வரை குணமடைந்து விட்டனர். சுமார் 3,500 பேர் வரை உயிரிழந்தனர். தற்போது உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 83 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது வரை இங்கு 1178 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று(மார்ச்27) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 லட்சத்து 32,224 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 24,087 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் இந்நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 19,357 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

You'r reading கொரேனா பாதிப்பு.. அமெரிக்கா முதலிடம்.. 83,000 பேர் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊரடங்கு ஏப்.14 வரை நீட்டிப்பு.. காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்