உங்கள் உறவினர் அல்லது நண்பர் அமெரிக்காவில் வசிப்பவரா?

Are you living in America?

ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர்.ஆனால் H 1பி, L 1 மற்றும் பிசினஸ் விசாக்களில் வருகிற எழுபது சதவிகிதத்திற்கு மேலானோர் வாடகை குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.இவர்களுக்கு பொதுவான வாகன நிறுத்தும் வசதி மட்டுமே செய்து தரப்படும்.

இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைகிற அனைவரும் தங்கள் நண்பர்களிடமிருந்து பெறுகிற இலவச ஆலோசனைகள் என்னவென்றால் ,முதலாவது வாகனத்தில் எந்தவொரு மதிப்புமிக்க பொருள்களை வைக்க வேண்டாம். இரண்டாவது தங்க ஆபரணங்களை அணிய வேண்டாம்.மூன்றாவதாக மற்றவரிடம் பேசும் பொழுது நிறத்தை(கருப்பு,வெள்ளை ) பற்றி பேச வேண்டாம் .மேலும் தனியாக எங்கும் செல்ல கூடாது .பெரும்பாலோனோர் இவை அனைத்தையும் பின்பற்றுவர்.இருப்பினும் 2009-ஆம் ஆண்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை .

அமெரிக்காவில் இந்தியர்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்

இந்தியர்கள் அதிகளவில் தங்கம் வைத்திருப்பர் என்பதை அமெரிக்க கொள்ளையர்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதாலோ என்னவோ 2020-லும் இத்தகைய கொள்ளை சம்பவங்களும் முற்று பெறவில்லை.கொரோனா கொள்ளைநோயால் இறப்பவர்கள் ஒருபக்கம் அதே நேரம் பசியால் வாடும் மக்கள் மற்றொரு பக்கம்.இவையெல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கி கொள்ளையிட நினைக்கும் கொடூரர்களிடமிருந்து அமெரிக்காவாழ் இந்தியர்கள் எவ்வாறு தங்களை பாதுகாக்க வேண்டும்? என பின்வரும் காணொளிகளில் தமிழர்கள்கூரும் ஆலோசனைகளை கேட்டு உங்கள் நண்பர் உறவினர்களுக்கு பகிருங்கள்.பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துங்கள்.

You'r reading உங்கள் உறவினர் அல்லது நண்பர் அமெரிக்காவில் வசிப்பவரா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் 6ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்