இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையில் ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவருக் கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டும், பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டும் இருந்தனர். இதனால், அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை குறித்து தேவையற்ற வதந்திகள பரவியதை அடுத்து, கடந்த 6ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், முன்னெச்சரிக்கையாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இன்று அறிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளரா நீங்கள்... வங்கி கணக்குக்கு வருகிறது ஆபத்து.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்