இந்தியாவை தொடர்ந்து சீன செயலிகளுக்கு தடைவிதித்த அமெரிக்கா !

US bans Chinese processors following India!

கடந்த மாதத்தில் இந்தியா 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் வணிகத்துறையால் டிக்-டாக் ( Tik-Tok) மற்றும் வீ சாட் ( We chat ) எனப்படும் சீன செயலிகளுக்கு வரும் செப்டம்பர் 20 முதல் தடை விதித்துள்ளது .சீனாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனைத்து செயலிகளுக்கும் ஆப்பில் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் ஸ்டோர் , கூகுளின் ப்ளே ஸ்டோர் போன்றவற்றிலும் பதிவிறக்கம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட டென்சன்ட ( Tencent ) மற்றும் பைட்டேன்ஸ் ( Bytedance ) நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வணிகத்துறையின் செயலாளர் வில்டர் ரோஸ் இதுபற்றி கூறியது " இந்த நடவடிக்கையானது அதிபரின் கட்டளையின் படி மேற்கொள்ளப்பட்டது " எனவும் மேலும் இந்த நடவடிக்கையானது அதிபர் ட்ரம்ப் அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகத் தனது அதிகாரத்தை எந்நிலையிலும் பயன்படுத்துவார் என்றும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்கும் , சீனாவின் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்வார் என்று கூறியுள்ளார்.

வரும் நவம்பர் 12க்குள் தடைசெய்யப்பட்ட ஆஃப்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.அமெரிக்காவில் டிக் டாக் ஆஃப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் மற்றும் வீ சாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 19 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியாவை தொடர்ந்து சீன செயலிகளுக்கு தடைவிதித்த அமெரிக்கா ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1,500 கோடி பாப்புலர் நிதி நிறுவன மோசடி உரிமையாளர் குடும்பமே சிறையில் அடைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்