கேசை வாபஸ் வாங்குங்க.. ட்ரம்புக்கு மதுரை ஆதீனம் ரிக்வெஸ்ட்

அமெரிக்காவில் அமைய உள்ள புதிய ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜோ பைடன், கமலா ஹாரீஸ் அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தருக டிரம்புக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள் என்று ஆரம்பிக்கும் அந்த அறிக்கையில் ஆதீனம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46 ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்ற திரு ஜோ பைடன் அவர்களுக்கும், துணை அதி பராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்ற திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் தமது ஆசிர்வாதத்தைத் தெரிவித்துள்ளார். இருவரும் வரும் தேர்தலில் அதிபர்களாக வருவார்கள் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கவாழ் இந்தியர்களிடத்திலே தெரிவித்திருந்தோம்.

நல்லாட்சி நடத்துவார்கள் இவர்கள் மூலமாக அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் கருப்பின மக்கள் வாழும் மற்ற நாட்டு மக்களிடையே நல்ல ஒற்றுமை ஏற்படும் வேற்றுமைகள் அகலும் மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்திட புதிய அரசுக்கு தமது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திட வேண்டுமென்றும், இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பத்தர வேண்டுமென்றும், புதிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமென்றும், முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அன்பு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் கேட்டுக்கொண்டுள்ளார்.

You'r reading கேசை வாபஸ் வாங்குங்க.. ட்ரம்புக்கு மதுரை ஆதீனம் ரிக்வெஸ்ட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாங்களும் தான் வயகாட்டு வேல பாப்போம்.. களத்தில் குதித்த தந்தை மகன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்