பைடனின் வெற்றியை ஒப்புக்கொண்ட டிரம்ப்... ஆனாலும் ஒரு டுவிஸ்ட்!

trump accepts joe biden victory after 10 days

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜே பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்துவந்தார். இதனால், வெள்ளை மாளிகை நிர்வாகப் பொறுப்புகள் மாற்றும் பணி தடைப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக டிரம்ப் பல ட்விட்களை போட்டுள்ளார். அதில், இன்னும் தேர்தல் நடைமுறை முடியவில்லை. அனைத்து வாக்குகளும் நேர்மையான முறையில் எண்ணி முடிக்கும் வரை நான் ஓய மாட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே, பைடனின் வெற்றியை முதல்முறையாக டிரம்ப் ஒத்துக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், ``பைடன் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார். அவரின் வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது. மோசடி வாக்குகளை வைத்துதான் பைடன் வெற்றிபெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவொரு வாக்காளர்களோ, பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" எனக் கூறியுள்ளார். இவரின் இந்த டுவீட் கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. வெற்றியை ஒப்புக்கொண்டதால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்துக்கு அவர் வந்துவிட்டார் எனக் கூறிவருகிறார்கள் அமெரிக்கர்கள்.

You'r reading பைடனின் வெற்றியை ஒப்புக்கொண்ட டிரம்ப்... ஆனாலும் ஒரு டுவிஸ்ட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பாதிப்பு: ஜப்பானில் ஐந்தாவது நடிகர் தற்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்