அமெரிக்க அமைச்சர்களாகும் 2 இந்தியர்கள்... பைடன் கையில் முடிவு!

vivek muruthy will appointed as american minister

ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் அமெரிக்காவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தார் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில், அருண் மஜூம்தார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆவார். விவேக் மூர்த்தி சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2009-யில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவால் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குனராக அருண் மஜூம்தார் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பைடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் விவேக் மூர்த்தி இடம் பெற்றிருக்கிறார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரம்,செய்யும் போதும் கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் ஆலோசகராக விவேக் மூர்த்தி இருந்துள்ளாா். எரிசக்தி தொடர்பான விவகாரங்களில் மஜூம்தார் ஜோ பைடனுக்கு ஆலோசனை கூறியுள்ளாா். இதனால் இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading அமெரிக்க அமைச்சர்களாகும் 2 இந்தியர்கள்... பைடன் கையில் முடிவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி 100 சதவீதம் மின்சார கார்களே... இங்கிலாந்தின் அதிரடி திட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்