பிடன் தேர்வு: கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக் குழுவில் விவேக் மூர்த்திக்கு இடம்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் ஜோ பிடன், முன்பு ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை மீண்டும் தெரிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் ஒருங்கிணைப்பாளராக ஜெஃப் ஸிண்ட்ஸையும், சர்ஜன் ஜெனரல் பொறுப்புக்கு விவேக் மூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சர்ஜன் ஜெனரல் பொறுப்புடன் நாட்டில் பெருமளவில் தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அவர் கவனிப்பார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 2,74,000 பேரை பலி கொண்டுள்ளதோடு பொருளாதார சரிவுக்கும் வழிவகுத்த கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வது ஜனவரி 20ம் தேதி பதவியேற்கப் போகும் பிடனுக்கு முன்னிருக்கும் பெரிய சவால் ஆகும்.

கோவிட்-19 குறித்த பிடனின் ஆலோசனைக் குழுவின் துணை தலைவர் பொறுப்பில் இருக்கும் மார்செல்லா நுனெஸ்-ஸ்மித்துக்கும் கொரோனா கட்டுப்பாட்டில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் மூர்த்தியின் குடும்பம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தது. பிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு என்ற இடத்தில் 1977ம் ஆண்டு அவர் பிறந்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த விவேக் மூர்த்தி, எம்.டி மற்றும் எம்.பி.ஏ. ஆகிய மேற்படிப்புகளை யேல் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். முந்தைய ஒபாமா அரசில் அவர் சர்ஜன் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.

You'r reading பிடன் தேர்வு: கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக் குழுவில் விவேக் மூர்த்திக்கு இடம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இணைய தள தேடுதலில் முதலிடம் பிடித்த நடிகர்.. 3வது இடம்பிடித்த காதல் நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்