ப்ளூ கலர் ஆடையில் பங்கேற்ற முக்கிய பெண்கள்... அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா ஆச்சரியம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் ஊதா நிற ஆடை அணிந்திருந்தது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நேற்று தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன் பதவியேற்றார். இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் அதிக கவனம் ஈர்த்த பெண்மணிகளான கமலா ஹாரிஸ், மிட்சேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட அனைவரும் ஊதா நிற உடையில் காட்சியளித்தனர்.

பெண்கள் வாக்குரிமையை குறிக்கும் விதமாக கமலா ஹாரிஸும், மிஷல் ஒபாமாவும் ஊதா நிற ஷேடுகளில் ஆடை அணிந்து வந்தனர். ஜில் பைடன் அணிந்திருந்த நீல நிற ஆடையும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை குறிக்கும்விதமாக இருந்தது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குடியரசின் சிவப்பு மற்றும் ஜனநாயகத்தின் நீலம் இரண்டும் சேர்ந்துதான் ஊதாநிறம் உருவாகிறது என்பதை குறிக்கும்விதமாகவும், பெண்களுக்கு ஒளிமயமான எதிர்காலம், வலி மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை உணர்த்தும்விதகாவும் ஊதா நிற ஷேடுகளில் உடைகளை அணிந்துவந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You'r reading ப்ளூ கலர் ஆடையில் பங்கேற்ற முக்கிய பெண்கள்... அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா ஆச்சரியம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எனது சாம்பலை புற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் தூவ வேண்டும் இறப்பதற்கு முன் டாக்டர் சாந்தா கூறியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்