இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவர் பிலிப் காலமானார்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தனது வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக்கொண்டார். இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர். வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார்.

பிலிப், கடந்த பிப்ரவரி 6-ந்தேதி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார். , இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவர் பிலிப் காலமானார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்டுபாடுகள் பலனளிக்கவில்லை என்றால் ஊரடங்கு தான் – தமிழக அரசு எச்சரிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்