கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல்

சீனா நாட்டின் வுகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.72 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ், பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன என தெரிவித்துள்ளார். பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புவதாகவும், ஆனால் அது தவறு என எச்சரித்துள்ளார். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார்.

You'r reading கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்