கொரோனா பாதிப்பு இப்போதைக்கு தீராது – உலக சுகாதார நிறுவனம்!

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இன்று வரை விலகியபாடில்லை. தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா. ஆரம்பத்தில் இதற்கான தடுப்பூசி இல்லாமல் இருந்த நிலையில், தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் தற்போதுதான் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. முதல் அலையை விட தற்போது கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருந்துவருகிறது.
இந்தநிலையில்,கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனோம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ``கொரோனா தொடர்பாக குழப்பதுடனும் மனநிறைவுடனும் பேசுகிறோம் என்றால் கொரோனா பாதிப்பு முடிவடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால், சுகாதார நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரலாம். சமூகமும், பொருளாதாரமும், பயணமும்,, வர்த்தகமும் மீண்டும் தொடங்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால், பல நாடுகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தற்போது நிரம்பி வழிகின்றன. மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்படக் கூடியது.கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்க நீண்ட காலம் ஆகும். ஆனால், பல காரணங்களால் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்ததது.

இந்த கொரோனா வைரஸ் மற்றும் திரிபு வைரஸை தடுத்து நிறுத்தலாம் என்பதைக் காட்டுகிறது. நாம் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

You'r reading கொரோனா பாதிப்பு இப்போதைக்கு தீராது – உலக சுகாதார நிறுவனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தம்பி மரணம் தீவிர மன அழுத்தம் வறுமை – ஐ.பி.எல்-போட்டியில் தெறிக்கவிடும் சக்காரியா யார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்