அதை கொஞ்சம் தள்ளி போடுங்க – இளைஞர்களிடம் கெஞ்சும் அரசு

கொரோனா தொற்று கொரத்தாண்டவம் ஆடும் நிலையில் இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.

உலக அளவில் கொரோனாவின் 2 வது அலை காட்டுத் தீயைவிட வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி, கொரோனா தடுப்பு நடமுறைகள் என விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா உட்பட சில நாடுகளில் பாதிப்பு மோசமடைந்துள்ளது.

நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர்.

கொரோனா தொற்றில் அதிக அளவு பாதிக்கப்படுவது, பிறந்த பச்சிளம் குழந்தைகள். பிறந்த குழந்தை கண்ணை விழித்து உலகை பார்ப்பதற்கு முன்பே மாண்டுபோவது, அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

இதையடுத்து பிரேசில் சுகாதாரத்துறை ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, கருவுருவதை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மருத்துவமனைகளில், ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறார்கள் என்றும், இந்நிலையில், பிரசவத்துக்காக கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்படுவததால், அவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவதுடன், கருவில் இருக்கும் சிசுவிற்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2 ஆம் அலை தாக்கம், கர்ப்பம் அடைந்த கொஞ்ச நாளிலேயே சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால், கொரோனா பரவல் குறையும் வரை, கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடுமாறு இளம் தம்பதியினருக்கு பிரேசில் அரசு அட்வைஸ் கொடுத்துள்ளது.

You'r reading அதை கொஞ்சம் தள்ளி போடுங்க – இளைஞர்களிடம் கெஞ்சும் அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போன் பேசுவதை தவிர்த்த காதலிக்கு நிகழ்ந்த சோகம்…

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்