இதயம் நொறுங்குகிறது – இந்தியாவின் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது. நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கைவசதிகள் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்டவை கொரோனா நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

இதனை சரிசெய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவின் இந்த நிலையைக் காணும் உலக நாடுகள் தாங்கள் உதவத்தயார் என்று தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளன.

நேற்று அமெரிக்க அதிபர் ஜோபைடனும் பிரதமர் மோடி இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது, இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும் என பைடன் உறுதியளித்துள்ளார். கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு உதவும் வகையில் 50ஆயிரம் டாலார் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் கூறியதாவது, ``இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது. மீகுந்த வேதனையை அளிக்கிறது என்றார். அதேபோல, உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மரியாவான் கூறும்போது, இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நமது பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது. அதை கைவிட்டால் பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடும் என்றார். மேலும், மே மாதத்தில் கொரோனாவின் தாக்கமானது உச்சத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading இதயம் நொறுங்குகிறது – இந்தியாவின் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கிடைக்குமா…? – இன்று முக்கிய உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்