இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் மோடி பயணம்

காந்திநகர்: நாட்டிலேயே முதல் முறையாக இயக்கப்பட்ட நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் செய்தார்.

குஜராத் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தல் வரும் நாளை மறுநாள் நடைப்பெற உள்ளது. இன்றுடன் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், மெக்சன்னா மாவட்டத்தின் அம்பாஜி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்ல திட்டமிடப்பட்டது. இதனால், பாதுகாப்பு காரணமாக தரை வழியாக செல்ல திட்டமிடப்பட்ட பயணம் பின்னர் விமானத்தில் செல்வார் என கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மோடி சபர்மதி ஆற்றில் இருந்து நீர்வழி விமானம் மூலம் தாரோய் அணைக்கு சென்றார். இந்தியாவில் இயக்கப்படுமு முதல் நீர்வழி விமானம் இதுவே ஆகும். மேலும், முதன்முறையாக இயக்கப்பட்ட கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் மோடி பயணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடும் பனிப்பொழிவு எதிரொலி: சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திணறல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்