கலிபோர்னியாவில் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீ

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயை இன்னமும் அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் வடக்கே வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள 50,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீக்கு தெற்கு கலிபோர்னியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 700க்கும் மேற்படட் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. இங்கு பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஒரு வாரமாக போராடி வருகின்றனர். அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் தீ கட்டுக்குள் அடங்காததால், பல மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
காட்டுத்தீயால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

You'r reading கலிபோர்னியாவில் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒல்லியான 'கும்கி' ஹீரோயின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்