சிறையில் அடைக்கப்படிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பியதால் பரபரப்பு

பிரான்ஸ் நாட்டில், திருடிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெடோயின் பெய்ட் (46) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் ரெடோயின் பெய்டுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ரியூ பகுதியில் உள்ள சிறையில் பெயிட் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில், பெயிட் உடன் இருந்த 3 கைதிகள் துணையுடன் வெளியே தப்பினான். சிறையைவிட்டு பெயிட் வெளியே வந்ததும் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவனை ஹெலிகாப்டரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரை போலீசார் கண்டுபிடித்த நிலையில், பெயிட்டை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

You'r reading சிறையில் அடைக்கப்படிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பியதால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெங்களூரு-தூத்துக்குடி நேரடி விமான சேவை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்