பொருளாதார தடை...டிரம்பை கடுமையாக எச்சரித்த ஈரான் அதிபர்...

சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி டிரம்ப்க்கு ஏற்படும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கடுமையாக எச்சரித்துள்ளார்

சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி டிரம்ப்க்கு ஏற்படும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கடுமையாக எச்சரித்துள்ளார்.

பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி  ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்பட்டு, விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஈரானுடன் எந்தவிதமான வர்த்தக உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என அமெரிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளை கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, 1980-களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதேகதி அமெரிக்காவுக்கும், டிரம்ப்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணை திட்டத்தை கைவிட முடியாது, திட்டவட்டமாக கூறியுள்ளார்.

You'r reading பொருளாதார தடை...டிரம்பை கடுமையாக எச்சரித்த ஈரான் அதிபர்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் புஜங்காசனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்