பாண்டாகரடி சூரியஒளி மின்சார உற்பத்தி மையம்

China just built a cute solar plant shaped like a panda

சீன நாட்டின் ஸ்பெஷல் பாண்டா கரடிகள். பார்ப்பதற்கு படுக்யூட்டாக அழகாக இருக்கும். துரு துருவென அப்படியே அள்ளிக் கொள்ளலாம் போலத் தோன்றும். குட்டி பாண்டாக்கள் கடும் சேட்டை செய்பவை.

சீனா, பல நாடுகளுக்கும் பாண்டா கரடிகளை பரிசாக அனுப்பி வைக்கும். பாண்டா கரடிகள் மீது சீனர்களுக்குக் கொள்ளைப் பிரியம். தற்போது, பாண்டா கரடிகள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும்விதமாக, டாடோங் என்ற இடத்தில் சீனா பாண்டக் கரடி வடிவிலேயே சூரிள ஒளி மின்சாரம் தயாரிக்கும் மையத்தை வடிவமைத்துள்ளது.

இந்த மையம் 248 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு 3.2 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1,056 மில்லியன் டன் நிலக்கரி எரிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன் 2.74 மில்லியன் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறுவதும் தடுக்கப்படுகிறது.

You'r reading பாண்டாகரடி சூரியஒளி மின்சார உற்பத்தி மையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ''இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்! ''சீனர்களுக்கு அறிவுரை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்