ஒபாமாவுக்கும், ஹிலாரி கிளின்டனுக்கும் வெடிபொருள் பார்சல்

Explosive parcel for the US president former foreign minister Hillary Clinton

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றம் முன்னாள் அதிபர் பில் கிளன்டனின் மனைவியும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டனுக்கு வெடி பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளது.

அமெரிக்காவில் மிக முக்கிய நபர்களுக்கு வரும் பார்சல்களையோ பரிசுகளையோ பரிசோதனை செய்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அப்படி கெடுபிடி நிறைந்த நிலையில் கூட அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு வந்த பார்ஸல்களை வழிமறித்து சோதனை செய்ததில் அதில் வெடி பொருட்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர் உளவு துறை அதிகாரிகள்.

அதே போல ஒரு பார்ஸலில் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் இல்லத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு வந்த பார்ஸலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருளும் ஒன்றாக உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading ஒபாமாவுக்கும், ஹிலாரி கிளின்டனுக்கும் வெடிபொருள் பார்சல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முல்லை பெரியாறில் புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்