இந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

The plane with 188 passengers in Indonesia crashed into the sea

இந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், 188 பயணிகளின் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியில் விமான அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு, இரண்டு கப்பல்கள், ஒரு சரக்கு கப்பல், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடலில் விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், 188 பயணிகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You'r reading இந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்றைய ( 29 .10. 2018) ராசிபலன்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்