இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ஜன.5-ல் தேர்தல்!

Srilanka Parliament to dissolve from midnight

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிசேனா முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ந் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே தமக்கே ஆதரவு இருப்பதாக கூறி வந்தார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிக்கையில் (வர்த்தமானி) மைத்திரிபால சிறிசேனா கையெழுத்திட்டிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tamil.news.lk

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது,

இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 5-ந் தேதி நடைபெறும் என்றும் ஜனவரி 17-ல் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதைய நிலவரம்:

- இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு தகவலால் கொழும்பில் உச்சகட்ட பதற்றம்

- கொழும்பில் அதிரடிப்படையினர் பெருமளவில் குவிப்பு

- இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி 5-ல் நடத்தப்படும் என தகவல்

- நாடாளுமன்றத்தைக் கலைக்க மாலை 6 மணிக்கு சிறிசேனா கையெழுத்திட்டார் என தகவல்

- நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்காக அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்கின்றன கொழும்பு ஊடகங்கள்.

- ஜனவரி 10-க்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ஆளுங்கட்சி எம்பி லக்‌ஷ்மண யாப்ப தகவல்

- இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு- அதிகாரப்பூர்வ தகவல்

You'r reading இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ஜன.5-ல் தேர்தல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான பாசுமதி அரிசி கீர் செய்வது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்