சுனாமி எச்சரிக்கை! நியூ காலிடோனியாவில் நிலநடுக்கம்!

Tsunami Alert New Caledonia Earthquake

தெற்கு பசிபிக்கின் நியூ காலிடோனியாவில் கடலுக்கடியில் மிகக் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியு காலிடோனியாவின் லாயல்டி தீவுகளுக்கு பக்கம் இந்த நிலநடுக்க மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்ப மையத்திலிருந்து சுமார் 1000 கி.மீ.க்குள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே, நியு காலிடோனியா அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கடலோர பகுதியில் வாழும் மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சுனாமி அலைகள் 5 நிமிடத்திலிருந்து 1 மணிநேரத்துக்குள் கடற்கரையைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், அலைகளின் உயரம் 3 மீட்டர் வரை எழும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

You'r reading சுனாமி எச்சரிக்கை! நியூ காலிடோனியாவில் நிலநடுக்கம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியல்: ரஜினிக்கு என்ன இடம் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்