இலங்கை- நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான மைத்திரிபால சிறிசேனாவின் அறிவிப்புக்கான தடை நீடிப்பு

Dissolution of Srilankan parliament- Interim order extended

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த அறிவிக்கை மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் வரும் 8-ந் தேதி வரை நீடித்துள்ளது.இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே திடீரென சிறிசேனா நீக்கினார். புதிய பிரதராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.

ஆனால் மகிந்த ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோற்றுப் போனார்.

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக மைத்திரிபால சிறிசேனா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்டவைகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனாவின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மைத்திரியின் அறிவிப்பு மீதான தடையை வரும் 8-ந் தேதி வரை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You'r reading இலங்கை- நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான மைத்திரிபால சிறிசேனாவின் அறிவிப்புக்கான தடை நீடிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தஞ்சை பெரிய கோவிலைப் பாழாக்கலாமா? - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்குக் கிளம்பும் எதிர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்